×

நிகத் சரீனுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை தொடரில் அதிரடியாக விளையாடி, தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘பெண்களுக்கான உலக குத்துச்சண்டை தொடரில் அதிரடியாக ஆடி தங்கம் வென்றுள்ள நிகத் சரீனுக்கு பாராட்டுகள். இவ்வெற்றிக்கு நீங்கள் முழுதும் தகுதியானவர். நிசாமாபாத்தில் இருந்து இஸ்தான்புல் வரையிலான உங்களது வெற்றிக்கதை மேலும் பல பெண்கள் தங்கள் கனவுகளை நம்பிக்கையுடனும் உறுதியுடனும் தொடர மிகச் சிறந்த ஊக்கசக்தியாக விளங்கும்’ என கூறப்பட்டுள்ளது….

The post நிகத் சரீனுக்கு முதல்வர் பாராட்டு appeared first on Dinakaran.

Tags : CM ,Nikat Sarin ,Chennai ,Chief Minister ,World Boxing Series for Women ,Nikat Sareen ,G.K. Stalin ,Dinakaran ,
× RELATED கோவை மாக்கினாம்பட்டியில் 8 செ.மீ. மழை பதிவு